RSS

சச்சினும் ஜட்டி விளம்பரமும் வொயிட் நைட்ஸும்!



ரொம்ப கஷ்டமா போச்சு சார்! இந்த படு பாதக பய மனசு எதெதுக்கெல்லாம் கிடந்து அடிச்சிக்குது பாருங்க! சச்சின் 200 அடிச்சுப்புட்டாரு..யாரோட? சாம்பியன்ஸ் பங்களாதேஷோடயோ ஜிம்பாப்வேயோடயோ இல்லை... சொத்தை டீம் சௌத் ஆஃப்ரிக்காவோட...எவன் வேணா அடிப்பான்! இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப அவசியமா? நீங்களே சொல்லுங்க?


எனக்கு என்ன தோணுதுன்னா..இதனால சச்சினுக்கு ஜட்டி விளம்பரம் கிடைக்கும்..ஆனா தெலுங்கானா பிரச்சினை தீருமா... தீராது! காஷ்மீர் பிரச்சினை ஓயுமா...ஓயாது! என்ன கருமம் சார் இது..நாட்டுல எவனுக்கும் சிந்திக்கவே தெரியலை! மூளை கெட்டுப் போய் கிறுக்குப் புடிச்சு அலையிறானுங்க..இப்படிதான் சார் ஏ.ஆர்.ரகுமான்னு ஒரு பய... நாட்டுல எவ்வளோ பிரச்சினை இருக்கு...அதை பத்தியெல்லாம் கவலைப் படாம அவன் பாட்டுக்கு ம்யூசிக் போட்டுட்டு இருக்கான்..அவனை கண்டிச்சு வளர்க்க ஆளில்லாம போச்சு வாத்யாரே...இந்த லட்சணத்துல அவன் போட்ட பாட்டுக்கு அவனுக்கு ஆஸ்கார் வேற...

அவனுக்கு ஆஸ்கர்னு கேட்ட போது நெஞ்செல்லாம் எனக்குப் பதறிடுச்சு! இதனால அவனுக்கு ஹாலிவுட் சான்ஸெல்லாம் வேற கிடைக்கும்...நம்மாளு ஒருத்தன் வெளிநாட்ல போய் சாதனை செஞ்சா நமக்கு எவ்வளவு அசிங்கம் சார்! சே.. இவனுங்க எல்லாம் எப்பதான் திருந்த போறாங்களோ...ஆஸ்கார் மேடைல ரகுமான் பேசின தமிழை கேட்டப்போ..எனக்கு மானமே போயிடுச்சி!ஈழத்தமிழர் பிரச்சினை நடக்கும் போது அதிகமா பாராட்டு விழா வேண்டாம்னு சொன்ன இவன்லாம் ஒரு தமிழன்!

ஏர்டல் விளம்பரத்துக்காகத்தான் அவன் இவ்வளோ நாள் ம்யூசிக் போட்டு நேஷனல் அவார்டெல்லாம் வாங்கினான்னு நான் சொன்னா எவனும் நம்ப மாட்றானுங்க சார்!..

அப்புறம் இந்த சச்சின் பயலுக்கு தேசபக்தி இருக்கற மாதிரி நடிக்கவே தெரியலை சார்.. சென்னை ல பாகிஸ்தானோட ஆடும்போது முதுகைப் பிடிச்சுக்கிடே ஆடினானே..அதுலயெல்லாம் நடிப்பு பத்தாது சார்! கைல காயம், கால் ல காயம்,முதுகில ஆபரேஷன்.. இதெல்லாமே பிசாத்து ஜட்டி விளம்பரத்துக்காகத்தானே! அப்பா செத்த நாலு நாள் ல செஞ்சுரி போட்டதெல்லாம் காசு குடுத்து தான போட்டாரு! எனக்கென்னவோ இந்த நாடு உருப்படும்னு தோணலை சார்!

இதுக்காக மட்டும் தான் மனசு கஷ்டப்பட்டுச்சுன்னு நினைக்காதீங்க...ரோஜர் ஃபெடரர் ரெக்கார்ட் மேல ரெக்கார்ட் பிரேக் பண்ணப்பவும் தனியா உக்காந்து அழுதேன்! இந்த மனுஷன் அவங்க நாட்டுக்காக இப்படி துரோகம் பண்றாரேன்னு! அப்புறம் உசைன் போல்ட்..நீச்சலடிப்பானே ஒரு பையன்..மைக்கேல் ஃபெல்ப்ஸ்..அவன் செஞ்ச சாதனைக்கு அவனை தூக்குல போட்டாதான் சார் என் மனசு ஆறும்!

இவனுகளுக்கு இதே பொழைப்பு சார்...சாதனை ஏதாவது செய்ய வேண்டியது... நாட்டுல நல்ல பேர் வாங்க வேண்டியது...என்னை இப்படி பதிவு போட்டு அழவைக்க வேண்டியது? அடிச்ச 200 ரன்னை இவ்வளோ நாள் சப்போர்ட் பண்ண மக்களுக்கு அர்ப்பணிச்சுட்டு தேச்சபக்தியை ஜட்டிக்குள்ள வச்சிடறானுங்க சார்! நாங்க எல்லாம் பதிவு எழுதியே நாட்டை காப்பத்தணும்... இவனுக ரெக்கார்டுகளை எல்லாம் உடைச்சிட்டு இந்தியாவுக்கு அவமானத்தை தேடித் தருவாங்க! என்ன மனுஷங்க சார் இவங்க?

இப்படிக்கு என்றுமே ஜட்டி விளம்பரம் கிடைக்காத கோபத்துடன்

ஒரு ப்ளாக்கர்!

(இந்த பதிவு எதற்காக என்று நினைத்து ஏங்கும் நெஞ்சங்கள் புலவன் புலிகேசி பக்கத்துப் போங்க..விடை கிடைக்கும்!அப்புறம் எங்களுக்கு எதிர்பதிவு போடறதா நினைச்சு சச்சினின் தேசபக்தியை திரும்பவும் அவமானப் படுத்தினால் அவர்கள் சங்கு, சச்சின் சத்தியமா அறுக்கப்படும்....இப்படிக்கு கடவுள் சச்சினின் சாதுவான பூசாரிகள்)

Repair almost Anything


My name is Khan and am not a Terrorist என்று முதல் காட்சியில் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் ஷாருக் கான் சீறும் போது நமக்குள் லேசாக ஒரு அதிர்வு ! மதத்தின் பெயரால் பயங்கரவாதம் செய்யும் கொலைகாரர்களை விட அதிகம் துன்பங்களை தினமும் சின்ன சின்ன அவமானங்களை சந்திக்கும் அதே மதத்தின் சாமானியர்களின் வலி துயரமானது. ஒரு பாஸ்போர்ட் எடுக்கும்போதும் நண்பர்கள் மத்தியில் கேஷுவலாக அரசியல் பற்றியோ பேசும் போதும் அவர்கள் நிச்சயமாக வெளியில் சொல்ல முடியாத அசௌகரியத்தை உணர்வார்கள்.ஆனால் அதை திரைப்படமாக எடுப்பது கொஞ்சம் சிக்கல் தான்.அதுவும் பெரிய ஸ்டார்களை வைத்துக் கொண்டு.


Asperger's Syndromeல் பாதிக்கப் பட்ட ரிஸ்வான் கான்(ஷாருக்) ஒரு சில விஷயங்களில் புத்திசாலி.எந்தப் பொருளையும் ரிப்பேர் செய்யும் அளவுக்கு புத்திசாலி.தம்பியின் நிறுவனத்தில் அழகுப் பொருட்கள் விற்கும் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது.பியூட்டி ஷாப்பில் வேலை செய்யும் மந்திராவிடம் (கஜோல்)காதல் கொள்கிறார்.டைவர்ஸ் ஆகி மகனுடன் தனியே வாழும் மந்திராவுடன் நெருக்கம் ஏற்பட்டு கல்யாணமும் செய்து கொள்கிறார்.வாழ்க்கை ஜாலியாகப் போகிறது 9/11 சம்பவம் வரை. அதுவரை நன்பனாகப் பார்த்த மந்திராவின் மகனை அவனுடைய பள்ளியிலும் வெளியிலும் வெறுப்புடன் பார்க்கிறார்கள். ஒரு சின்ன தகராறில் அவனை கொன்றும் விடுகிறார்கள்.

 தன் மகனுக்கு ஒரு முஸ்லிம் தகப்பனாக வந்ததால்தான் அவனை இழந்தோம் என்ற விரக்தியில் ரிஸ்வான் கானிடம் கோபம் கொள்கிறாள். ரிஸ்வான் சமாதானம் செய்ய முயல்கையில் "போ..போய் நாங்கள் தீவிரவாதியில்லை என அதிபரிடம் சொல்லிவிட்டு வா.."என துரத்தி விடுகிறார். ரிஸ்வானின் பயணம் துவங்குகிறது. போலீஸில் மாட்டிக் கொள்வது, தீவிரவாதத்தை எதிர்ப்பது..ஹரிகேன் புயலில் சிக்கியவர்களை மீட்பது தேசத்தின் ஹீரோ ஆவது என பிற்பகுதி முழுக்க ஃபாரஸ்ட் கம்ப்.

டாம் ஹேங்ஸில் ஐம்பது சதவீதமாவது செய்து விடவேண்டும் என்கிற முனைப்பு ஷாருக்கிடம் தெரிகிறது. கஜோல் குச் குச் ஹோத்தா ஹை போல துறு துறுவென நடிக்க முயல்கிறார். பாவம் வயது ஒத்துழைக்க மறுக்கிறது போலும்.சோக காட்சிகளில் அசத்தல்.

கரன் ஜோஹருக்கு ஒரு வார்த்தை.. இது போன்ற சென்சிடிவான படங்களில் உங்கள் டிரேட் மார்க் காட்சிகளை ஒதுக்கி விடுங்கள். படத்தின் ஆதார செய்தி அடிபட்டு விடுகிறது.ஆனால் சில காட்சிகள் மனசை உருக்குகிறது. ஆஃப்ரிக்க மக்களுக்கு நிதி சேர்க்கும் காட்சி, 9/11க்கு பிறகு நடக்கும் அஞ்சலிக் கூட்டம் என சில காட்சிகள் அற்புதம். ஹம் ஹை விஷ்வாஸ் என ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பாடுவது கரன் ஜோஹர் படத்தில் மட்டுமே நடக்கும்.
 
ரவி.கே.சந்திரன் , ஷங்கர் எசான் லாய், தீபா எல்லாரும் இந்த கதைக்கு என்ன தேவையோ அதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

Religion was man's emotional response to unknown என்றார் Marret. எல்லா முஸ்லிம்களும் தீவிர வாதி அல்ல என்பதை சொல்ல வந்த ஷாருக் கரண் கூட்டணி ஹரிகேன் புயல் , Asperger's சின்ட்ரோம் , ஃபாரஸ்ட் கம்ப் என எங்கெங்கோ போய் சொல்ல வந்ததை கோட்டை விட்டு விட்டார்கள்.

மணிரத்தினத்தின் அஞ்சலி ஸ்பீல்பெர்கின் ஈ.டி(Extra Terrestrial) படத்தின் பிரமாதமான இன்ஸ்பிரேஷன் என்றால் MNIK , Forrest Gump ன் மிதமான இன்ஸ்பிரேஷன்.

வெளியூர்காரனிடம் ஒரு அசல் பேட்டி!


வெத்து டோமர்,வேகாத டாபர் என்றெல்லாம் பொது மக்கள் அன்புடன் அழைப்பது யாரை?எல்லா ஃபிகர்களும் ரசிப்பதற்கே என்று டயலாக் விடும் ஆஸ்கார் நாயகன் யார்? விஜய் படம் வந்தாலும் அஜித் படம் வந்தாலும் விமர்சனம் செய்து சகட்டுமேனிக்கு அடி வாங்குவது யார்?கோரஸாக நீங்கள் கத்துவது கேட்கிறது...

இவருடைய பதிவுகளை படித்து விட்டு இப்படியொரு பீஸை நாங்கள் கண்டதில்லை என மரியா ஷரபோவாக்களும் ப்ரிட்னி ஸ்பியர்ஸ்களும் ஏன் வியாசர்பாடி முட்டு சந்தில் இட்லி விற்கும் ஆயாக்களும் கூட இனி எங்கள் ச்சோ ச்வீட் லவ்வர் பாய் வெளியூர்காரன் தான் என்று சத்தியம் செய்துள்ளனர்

களைப்பில் இருந்த மாவீரன் வெளியூர்காரனை பேட்டி எடுக்கலாமானு கேட்டேன். டைம்ஸ் பத்திரிக்கை கேட்டும் மறுத்த வெளியூர்காரன் (ச்ச..என்ன கருமம் டா!) ரெட்டைவால்ஸுக்கு அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்...

( நானும் எல்லா பேட்டிகள்லையும் பார்த்திருக்கேன்..முழு பகுதியை எங்க காயலான் கடைக்குப் போட்ருவானுங்களா)...சரி ஓகே..ஒவர் டூ வெளியூர்!

ரெட்டைவால்ஸ் : "வெளியூர்காரன்"ற பேர்ல எழுதுறீங்களே..இதுக்கு ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்கா?

வெளியூர்காரன் :நான் முத முதல்ல மெட்ராஸ் வந்தப்போ எங்க போனாலும் வெளியூர்காரனா நீ?னு கேட்டு டார்ச்சர் பண்ணானுங்க. இதையே ஏன் புனை பெயரா வச்சுக்கக் கூடாதுன்னு யோசிச்சேன்.

ரெ.வா:எங்க எல்லாம் இந்த மாதிரி பல்ப் வாங்கினீங்க?

வெ.கா:டீ கடைல, துணிக்கடைல, தியேட்டர்ல அப்புறம் நான் போன எல்லா எடத்திலயும்! பய புள்ளைக பார்த்தவுடனே கண்டுபுடிச்சிடறானுங்க.

ரெ.வா: ரொம்ப நல்லது! எழுதணும்னு உங்களை யார் கட்டாயப் படுத்தினா?

வெ.கா: சுஜாதா இறந்தப்போ ரொம்ப கஷ்டமாயிருந்தது. அந்த வெற்றிடத்தை யார் நிரப்பப் போறான்னு யோசிச்சப்போ சட்டுனு இந்த முடிவெடுத்துட்டேன்.

ரெ.வா:இதனால மக்கள் பாதிக்கப்படுவாங்கங்கறதை நீங்க யோசிச்சுப் பார்க்கலையா?

வெ.கா:அவனவன் அசல் படம் பாக்கறதுக்கு லைன் கட்டி நிக்கிறான்..நான் என்ன அப்படியா சாவடிச்சுடப் போறேன்!

ரெ.வா: சரி வெளியூர்காரன் உங்க பார்வைல தமிழ் சமூகம் எப்படி இருக்கு?

வெ.கா: வெளங்காது

ரெ.வா: என்னது வெளங்காதா?

வெ.கா:ரொம்ப கஷ்டம் சார்!(பேசிக் கொண்டிருக்கும் போதே கண் கலங்குகிறது....) ஃபிரண்ட்ஸ் கிட்ட பெட் கட்டினேன் சார்.. வேட்டைக்காரன் படம் 200 நாள் ஓடப் போவுது... தலைவர் அரசியல்ல கலக்கப் போறார்..பார்லிமெண்ட்ல பஞ்ச் டயலாக் பேசுவார்..அதைக் கேட்டு சோனியா காந்தியே பயப்படுவாங்கன்னு என்னென்னமோ கனவு கண்டேன் ..எல்லாம் பாழாப் போயிடுச்சு! நேத்து கூட ஒருத்தன் ஃபோன் பண்ணான். மாப்ள..போண்டா மணி ரசிகர் மன்றம் திறக்கறாங்களாம்.தலைவர் பதவி எடுத்துக்கிறியான்னு நக்கல் பண்ணான் சார். ஆனா நாங்க அசர மாட்டோம். சுறாவை விட்டு எல்லாரையும் கடிக்கலைன்னா பாருங்க...தலைவரை கிண்டல் பண்ணி எஸ்.எம்.எஸ் அனுப்பியே என்னை நோகடிக்கிறானுங்க... இந்த தமிழ் சமூகம் உருப்படுமா சார் நீங்களே சொல்லுங்க!

இளைய தளபதி வாழ்க

இளைய தளபதி தகப்பனார் வாழ்க..சாரி சார் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன்!

ரெ.வா: நீங்க நிறைய சினிமா விமர்சனம் பண்றீங்களே.. அடூர் கோபால கிருஷ்ணன் மதுர் பண்டார்கர் படங்களை பத்தியெல்லாம் ஏன் எழுத மாட்றீங்க?

வெ.கா : பண்டார்கரா..எதுனா புது டைப் பிரியாணிங்களா! ஏன்யா யோவ்..வேட்டைக்காரன் பாக்குற முட்டாப் பயகிட்ட பேரலல் சினிமா..அவார்ட் சினிமான்னு உளறிட்டு இருக்க...நாங்க எல்லாம் ஒரு தடவை முடிவு பண்ணோம்னா.. எங்க பேச்சை நாங்களே கேக்கமாட்டோம் யா..

இளைய தளபதி வாழ்க
சஞ்சய் வாழ்க சந்திரசேகர் வாழ்க சங்கீதா வாழ்க...

சாரி சார் மறுபடி எமோஷனல் ஆயிட்டேன்...

ரெ.வா : ஏன் இவ்வளோ எமொஷன் ஆவுறீங்க!

வெ.கா : அது அப்படி தாங்க. தலைவரை பத்தி பேசும் போது யூரின் வந்துடுது..வாமிட்டிங் வந்துடுது..பிளட் பிரஷர் ஏறுது..(மனசுக்குள்... சுறாவாவது ஓடுமா...) நீங்க அடுத்த கேள்வியை கேளுங்க சார்

ரெ.வா: ரீமேக் படங்களைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

வெ.கா : ரொம்ப நல்ல விஷயம். வெறும் டைட்டில மட்டும் சுட்டு என்ன பிரயோஜனம்? கதையோட அல்லேக்கா தூக்கினாதான எடுபடும்! இவனுங்களுக்கு பிரஸண்டேஷன் வரலை.. ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க என்ற அதி முக்கியமான கேள்வியை நீங்க இன்னும் கேக்கலைங்கறதை நினைவு படுத்த விரும்புறேன் ரெட்டைவால்ஸ்!

தளபதி வாழ்க.

ஸாரி பா...மறுக்கா டென்ஷன் ஆயிட்டேன்...

ரெ.வா :சரி சொல்லுங்க ரெண்டு மாசம் முன்னாடி சோனா ஏன் ஆஸ்திரேலியா போனாங்க?

(சோனா ஏன் ஆஸ்திரேலியா போனங்க என்பது பற்றியும்,,மேலும் பதிவுலகம், தமிழக அரசியல் , 2011 ல் யார் முதல்வர், தான் ஒரு லவ்வர் பாய் ஆனது பற்றியும் மனம் (மற்றும் கண்டதையும் )திறந்த வெளியூர்காரனின் பதில்கள் ...அடுத்த பதிவில்!)

தனிமையுடன் ஒரு தனிமை




சில தருணங்களில் தனிமையை கொண்டாடுகிறேன்

சில நேரம் ஆயாசம்

தொடர்புகள் அற்றுப்போன

பைத்தியக்கார வெளிகளில் அலைய விரும்புகிறது மனம்.

பாரதியின் ஞானரதம் போல் எனக்கொன்று கிடைக்காதா?

மா பலா வாழை பக்கார்டி

எங்ஙனம் திரும்புவேன் கர்ப்பப்பைக்குள்

மெய்யெனக் காற்றும் பொய்யெனத் தீண்டலும்

ஜன்னல்கள் இல்லாத வீட்டின் மேற்கூரையில்

பல்லி போல் ஒட்டிக் கொள்கிறேன்

சங்குக் கூச்சல்களை கண்டு பயந்திருக்கிறீர்களா?

ராப் பொழுதின் கடற்கரைக் காற்று?

கழுவாத தேநீர் கோப்பைகள்?

சீரான மின்விசிறியின் சப்தம்?

தொடர்ந்தடிக்கும் தொலை பேசி?

யாருக்கேனும் நஷ்டமுண்டா

தனிமையுடன் தனிமையுடன் எனை நான் கொண்டு போனால்!

அகல்யாவுக்கு- A Letter from Constant Lover




அகல்யாவுக்கு!


நீ எப்படி இருக்கிறாய் என்பதை விட எப்படி இருப்பாய் என்பதில் தான் இப்போது ஆர்வம் அதிகம். நாம் படித்த ஸ்கூலை பார்க்கும்போது இப்போது உனக்கு என்ன தோன்றுகிறதோ தெரியவில்லை. எனக்கு நிச்சயம் நாம் கடலை போட்ட மரத்தடி கண்ணுக்குத் தெரிகிறது. நான் மென்று துப்பிய பபிள்கம்கள், நீ என் தலைமுடியை கலைத்து விளையாடியது என்று எல்லாமும் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.ஆனாலும் ஜிவ்வென்று இருக்கிறது. எத்தனை எத்தனை சுவாரஸ்யங்கள்...அத்தனையையும் உன் கணவனிடம் சிரித்துக் கொண்டே சொல்லியிருப்பாய் என நம்புகிறேன்.

கடைசி பெஞ்சின் இந்தப் பக்கம் நானும் அந்தப் பக்கம் நீயும். எத்தனை லூட்டி அடித்திருப்போம்? உனக்கு ஒன்றாவது ஞாபகமிருக்கிறதா அகல்யா..? நான் ஒரு முறை தற்செயலாக பிராக்டிகல் நோட்டின் ஒரு பக்கத்தில் கிறுக்கிவிட்டேன் என்று அந்த கெமிஸ்ட்ரி டீச்சர் பேயாட்டம் ஆடிய போது, இரண்டே நாளில் முழுவதும் எழுதி தந்தாயே..அப்போதே முடிவு செய்துவிட்டேன் நீ தான் என் வாழ்க்கை என்று. ஆனால் விதியை பார்த்தாயா... நீ எனக்கு இன்று வெறும் தியரி. நான் என் பேரக் குழந்தைகளுடன் கதைகள் பேசும்போது நீ என் கற்பனை கதாபாத்திரங்களுடன் கலந்திருப்பாய்.

உன்னைப் பற்றி சிலாகிப்பதில் எனக்கு அலுப்புத் தட்டுவதே இல்லை.என்ன செய்ய... திருநகர் மூன்றாவது பஸ் ஸ்டாப்பில் வைத்து உனக்குக் கிரீட்டிங் கார்டும் ஒரு மௌத் ஆர்கனும் கொடுத்து ஐ லவ் யூ சொன்னேன்..ஞாபகமிருக்கிறதா? அந்த கிரீட்டிங் கார்ட் நம் நண்பன் வாங்கிக் கொடுத்தது என்ற அதி பிரசித்தமான உண்மை உனக்குத் தெரியாமலே போகட்டும். அப்பொழுதே நீ வேண்டாமென்று சொல்லியிருந்தால் இப்படி இரவு கண்விழித்துக் கடிதம் எழுதிக்கொண்டிருந்திருக்க மாட்டேன்.பின்பொருமுறை மீனாக்ஷி அம்மன் கோவிலில் வைத்து எதேச்சையாகப் பார்த்து ( இதுவும் எதேச்சை அல்ல) பொற்றாமரை குளத்தில் வைத்து உன்னிடம் உளறிக் கொட்டிகொண்டிருந்தேன்.எத்தனை ரம்மியமான பொழுதுகள்.எங்கே போனாய் அகல்யா?

ஒவ்வொரு முறை பொய் சொல்லும் போதும் தலையில் ஒரு முடி உதிரும் என்று பயமுறுத்தி இருந்தாய். உன்னிடம் நான் ஒரு லட்சத்து முப்பதாயிரத்து இருநூற்று பதினேழு பொய்கள் சொல்லியிருக்கிறேன்.இன்னும் வழுக்கை விழவில்லை.அப்படியென்றால் நீ என்னிடம் சொன்ன முதல் பொய்யா அது?

நமக்குப் பிடிக்காத அந்த ஃபிஸிக்ஸ் மாஸ்டரை நான் கேள்வி கேட்டு படுத்தி எடுத்துக் கொன்டிருந்த போது உன் ஓரக்கண்ணில் எவ்வளவு பெருமிதம். அவர் என்னைக் கேவலமாக திட்டி கிளாஸ் ரூமை விட்டு வெளியே அனுப்பும் போது கூட உன் முகத்தில் பெருமிதம். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் ஒரு பெண்ணின் கர்வம் இல்லையா அது? இன்றும் அந்த காட்சி என் கனவில் வந்து போகும்.ஆனால் ஃபிஸிக்ஸ் மாஸ்டர் முகம் மட்டும் லேசாக பிரகாஷ் ராஜ் ஜாடையில் வருகிறது.

அரையிருட்டில் அலைபாயுதே படம் பார்க்கையில் ஸ்னேகிதனே பாடல் வரும்போது என் தலை முடியை கோதி விட்டுக்கொண்டிருந்தாய்.அந்த நேரத்தில் பிரதமர் பதவி கொடுத்திருந்தால் கூட வேன்டமென்றிருப்பேன்.உன் கணவன் துரதிர்ஷ்டசாலி.அந்த பதினாறு வயது அகல்யவை நினைத்து இப்படி கடிதம் எழுதும் பாக்கியம் அவனுக்குக் கிடைக்குமா?

ஸ்கூல் முடிந்தவுடன் நான் ஃபுட்போர்டில் தொங்கியபடியே நண்பர்களுடன் பஸ்ஸில் போவதை உன் அம்மாவுடன் காரிலிருந்து ஒரு வித பதட்டத்துடன் பார்த்தபடியே பயணிப்பாய்.எந்த சினிமாவிலாவது அது வந்திருக்கிறதா அகல்யா... உன் தங்கை என்று ஒரு டெட்டி பியர் பொம்மையை அறிமுகம் செய்துவைத்தாயே.. எவ்வளவு வளர்ந்திருப்பாள் ? இப்போது அவள் பின்னால் என்னைப் போல் ஒரு அதிர்ஷ்டசாலி சுற்றிக் கொண்டிருப்பானோ?

என்னிடம் நீ கோபபப்பட்டு எனக்கு நினைவில்லை...அந்த கடைசி தினத்தைத் தவிர. என்னையும் இந்தப் பாழாய்ப் போன உலகத்தினுள் இழுத்து வந்து விடலாம் என்று எப்படி எப்படியோ முயற்சித்தாய்.Ha Ha Ha...Lovers dream.Dreamers love. I am a dreamer , damn it!

இதெல்லாம் காதல் இல்லை இன்ஃபாக்ச்சுவேஷன் என்று நண்பன் பிதற்றினான்.அது உண்மையென்றால் காதலை விட இன்ஃபாக்ச்சுவேஷனே எனக்கு மிகவும் பிடித்தமானது.நமது இந்த அபத்தமான இந்த காதலை பெரியார் நிலையம் பிரிட்டிஷ் பேக்கரி அருகில் வைத்து நீ முறித்துக் கொன்ட போது உன் மேல் எனக்குத் துளியும் கோபமில்லை.ஏனென்றால் நீ கனவிலிருந்து நிஜத்துக்குப் போய்விட்டிருந்தாய். நான் அந்த பெருங்கனவில் இருந்து வெளியே வர மறுத்துவிட்டிருந்தேன். நீ என்றைக்கு நிஜமான உலகத்தில் கலந்து விட்டாயோ அன்றே நீ என்னிலிருந்து இறக்கத் தொடங்கியிருந்தாய்.

ஸ்வாசங்கள் சீராக வரத் திணறும் இந்த தருணத்தில் நீ மூன்றாம் சாமத்தின் கனவுகள் முடியும் தருவாயில் இருப்பாய்! நடு இரவில் விழித்துக் கொள்ளாதே...இந்தப் பின்னிரவுக் கடிதத்தை முடிக்கும் போது காற்றினூடாக இதன் அலைகள் உன்னை வந்து எழுப்பும் வரை நீ தூங்கிக்கொண்டே இருக்க வேண்டுமென்ற ஆசையுடன் இந்தக் கடிதத்தை எழுதி முடிக்கிறேன்.

அன்புடன்
A Constant Lover

My name is Khan & கலைஞரின் பன்ச் சாங்




கரண் ஜோஹர் டைரக்ஷனில் ஷாருக் நடித்தால் பாடல்கள் எப்படி இருக்கும் என்று ஒரு உங்களுக்கே ஒரு யூகம் இருக்கும். அதில் இம்மி பிசகாமல் பாடல்களை கொடுத்திருக்கிறார்கள் ஷங்கர்- எசான் - லாய். குச் குச் ஹோதா ஹையில் வரும் துஜே யாத்ன மேரி போல் இங்கே சஜ்டா என்றொரு பாடல். ஜோதா அக்பரில் வரும் க்வாஜா பாடலை கொஞ்சம் தொட்டு சென்றிருக்கிறார்கள்.ரஹத் ஃபதே அலி கான் பாடியிருக்கிறார்.பிரபல நஸ்ரத் ஃபதே அலி கானின் மருமகனாம். தேரெ நெய்னா என்ற பாடலை வேறு எந்த ஷாருக் படத்துக்குள்ளும் நுழைத்து விடலாம். அவரும் அதே போல் தலையை ஆட்டி ஆட்டி ஆடப் போகிறார்.
அட்னன் சாமியும் ஷங்கர் மகாதேவனும் பாடியிருக்கும் நூர்-ஏ-குதா என்ற பாடல் தான் கிளாஸ்.இரண்டாவது முறை கேட்கும் போதே உருக்குகிறது. அட்னான் சாமி குரலில் என்னத்தைத் தடவி பாடுகிறார் என்று தெரியவில்லை. இவரை அதிகமாக தமிழில் பயன்படுத்த மாட்டேன்கிறார்கள். பிறகு அல்லா ஹி ரஹெம் என்று ரஷீத் கான் பாடிய பாடல். படத்தோடு பார்த்தால் ரசிக்க முடியும். சூரஜ் பாடலின் ஸ்டைலயும் பீட்டுகளையும் நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருக்க முடியும்.ஸ்ட்ரிங்ஸில் குழையும் தீம் ம்யூசிக் அருமை. எல்லாமே அக்மார்க் ஷாருக் பட பாடல்கள்.
ஷாருக் கஜோல் கரண் என்று மெகா வசூல் படங்களை கொடுத்த கூட்டணி.சாதாரணமாவே ஷாருக் கொன்சம் உணர்ச்சி குவியல்.இதில் ஆட்டிஸம் வந்தவராக வேறு நடிக்கிறார். படத்தின் ஸ்டில்களையும் ட்ரெய்லரையும் பார்த்தால் சென்டிமென்ட் கடலில் மூழ்கடித்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.லேசாக Forrest Gump வாடையும் அடிக்கிறது. My name is khan தீவிர ஷாருக் கஜோல் ரசிகர்களுக்காக ஷங்கர் எசான் லாய் கொடுத்திருக்கும் கஸாட்டா ஐஸ்கிரீம்.

***************************************************************************************



வா வா தலைவா என்றொரு பாடல். ஹாரிஸ் ஜெயராஜ் இசை. உன்னி மேனன் ஹரி சரண் என்று வழக்கமாக ஹாரீஸின் இசையில் கௌதம் மெனன் படத்தில் பாடுவது போல் ஒரு பாடலை பாடியிருக்கிறார்கள்.மைக்கேல் ஜாக்ஸன் விஜயலக்ஷ்மி நவனீதகிருஷ்ணன் பாடல்களைப் பாடினால் எப்படி இருக்கும் ? அப்படி முதல்வரை வாழ்த்தி ஒரு பாடல் . விஜய் அஜித் எல்லாம் தோற்றுப் போவர்கள். அப்படியொரு ஓபனிங் சாங் நம் முதல்வருக்கு.கருமம் நம் சமூகம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. ஒரு மனிதருக்கு எவ்வளவுதான் பாராட்டுதல்கள் பிடிக்கும். அவருக்கே சலிப்பு தட்டாதா.. இல்லை புகழ்பவர்களுக்குதான் கொஞ்சம் கூட கூச்சமே இருக்காதா? உங்களுக்குப் பாராட்டு விழாவும் பஞ்ச் பாடல்களும் போட்டுக் குஷிப்படுத்தினால் தான் வேலைக்கு ஆகுமென்றால் பொதுமக்களாகிய நாங்கள் என்ன செய்யவேண்டும் கலைஞரே?

கிருஷ்ணா கிருஷ்ணா...A tale of Past Present and Future!




கிருஷ்ணன் என்றதும் உங்கள் ஞாபக செல்களில் என்னவெல்லாம் ஓடுகிறது? வெண்ணை திருடுபவன், விளையாட்டுப் பிள்ளை, குருக்ஷேத்திரத்தின் சூத்திரதாரி, கோபிகைகள்,பிருந்தாவனம், மதுரா.

உப பாண்டவத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மை புனைவுக்குள் அழைத்துச் சென்றது போல கிருஷ்ணா கிருஷ்ணா எனும் இக்குறுநாவலில் புனைவிலிருந்து வந்து நம்முடன் உரையாடுகிறார் இந்திரா பார்த்தசாரதி.இது நாள்வரை புராணங்களின் மீதும் இதிகாசக் கதைகளின் மீதும் வைத்திருந்த அபிப்பிராயத்தை லேசாக அசைத்து விடுகிறது இந்நாவல். கிருஷ்ணனின் பால்யம், வாலிபம், அரசியல், முக்கியமாக கிருஷ்ணனின் அந்திம பொழுதுகளை கற்பனையோடோ அல்லது நிஜமாகவோ விவரிக்கிறது இந்நூல்.வாழ்க்கைக் குறிப்பாக அல்ல...சில பல தர்க்கங்களோடு.

ஜரா எனும் வேடனிடம் கிருஷ்ணன் அம்பெய்தப்படும் சூழ்நிலையில் கிருஷ்ணன் ஜராவிடம் தன் Auto-Biography யாக சொல்லும் விஷயங்களை வேடன் நாரதரிடம் கூறி நாரதர் நம்மிடம் உரையாடுவதாக எழுதப்பட்டிருக்கிறது. யாதவர்களின் முடிவும் மதுராவின் துரதிர்ஷ்டமும் இன்னும் பல நிகழ்ச்சிகளுக்கு காரண காரியங்கள் புராணங்களிலேயே விவரிக்கபட்டிருக்கும். ஆனால் அதன் உண்மையான அர்த்தம் காண விழைவதே புனைவின் சுவாரஸ்யம். உதாரணமாக சம்பவாமி யுகே யுகே என்று நம் சமூகத்தில் அடிக்கடி ஒரு வார்த்தை உதிக்கக் கேள்விபட்டிருப்பீர்கள்.அதாவது எங்கே அதர்மம் தலை தூக்குகிறதோ எட்சட்ரா எட்சட்ரா..நான் மீண்டும் வருவேன் என்று.அதன் மறு அர்த்தம் கிருஷ்ணனாகிய நான் எடுத்த அவதாரத்தை அந்தந்த காலங்களுக்கு ஏற்ப நீங்களே அர்த்தப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது தான்.இப்படியாக இ.பார்த்தசாரதி காட்டும் உள்ளர்த்தங்கள் நிறைய.

கிருஷ்ணன் நினைத்திருந்தால் குருக்ஷேத்திரமே நடந்திருக்காதே. எதற்காக அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் விஸ்வரூபத்தைக் காட்டி நமக்குக் கதை சொல்ல வேன்டும். இதெல்லாம் நீண்ட நாள் விடையில்லாமல் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகள். அதற்கான விடையை கிட்டத்தட்ட நெருங்கியிருக்கிறது 'கிருஷ்ணா கிருஷ்ணா'.

Political Strategies எப்படி யுகம் யுகமாக ஆளுங்கட்சியையும் எதிர்க்கட்சியயும் அலைக்கழித்திருக்கிறது என்பதையும் அநாயசமாக விவரிக்கிறது இந்நூல். எல்லோருக்கும் பிடித்தமானவனாக கிருஷ்ணன் ஏன் அரசனாக இருக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கான பதில் அவன் வாழ்க்கையாக இருக்கிறது. கீதை எப்பொழுது பிறந்தது என்பதை நாம் அறிவோம். என்ன மாதிரியான சைக்கிக் டென்ஷனில் உருவானது என்பதையும் இ.பா அவருடைய மொழியில் அலசியிருக்கிறார்.

கடமையை செய்.பலனை எதிர்பாராதே என்பதன் உள்ளர்த்தம் யோசிக்க வைக்கிறது. அர்ஜுனனுக்கு ஏற்படும் Existentialistic Dilemmaவிலிருந்து அவனை காப்பாற்றி ஒரு போரை உருவாக்கி எதை விளக்குகிறான் கிருஷ்ணன்? எல்லாம் மாயை என்பதையா?.கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்றைய அவசர உலகின் ஆதார கேள்விகளுக்கு பதில் தரும் சுவாரஸ்யத்தை எட்டிபிடித்திருக்கிறார் இ.பா. கிருஷ்ணனை ஒரு சமுதாயக் கனவு என்று அறிவித்துவிட்டே நாரதரை நம்முடன் உரையாட விட்டிருக்கிறார்.நாரதரும் தேவ பாஷையில் பேசுவதில்லை.நம் மொழியிலேயே பேசுகிறார்.அவரது உரையாடலில் இண்டர்நெட் வருகிறது.Weinberg வருகிறார். போருக்காக தூது செல்லும் கிருஷ்ணனை Ambassador at Large என்றழைக்கிறார்.

மிகவும் ஆச்சரியப் பட வைத்த விஷயம், கிருஷ்ணனின் முடிவு. தன் அந்தியில் பிரியத்துக்குரிய ராதாவை தேடிச் செல்கிறான் கிருஷ்ணன்.பால்யத்தில் ராதாவுடனான லீலைகள் திரும்பவும் நடுக்குமா என்ற நப்பாசையில்.எல்லாம் தலைகீழாக இருக்குமென்ற எதிர்பார்ப்புடன் செல்பவனுக்கு அங்கே ஆச்சரியம்.சிறுவர்கள் குழலூதிக்கொன்டிருக்கிறார்கள்.எல்லோரும் கிருஷ்ணனாக மாறிவிட்டிருக்கிறார்கள். கிருஷ்ணனும் குழ்லூத முயற்சிக்கிறான். இசை வருவதில்லை. அங்கு ராதாவை வயாதான மூப்படைந்தவளாகப் பார்க்கத் தைரியமில்லாமல் ஜராவிடம் அம்பை (மரணத்தை) வாங்கிக் கொள்ள காட்டுக்குத் திரும்புகிறான். கிருஷ்ணனின் வாழ்க்கை இவ்வளவு சுவாரஸ்யமா என்று வியப்படைய வைக்கிறது இ.பா வின் புனைவு. கிருஷ்ணா கிருஷ்ணா சமுதாயக் கனவின் சமகால நீட்சி என்பதோடல்லாமல் வருங்காலத்துக்குமான புனைவுமாகிறது.

வரலாற்றிலிருந்து கொஞ்சமாக விலகி சரடு விடுவதை விட கஷ்டமானது புராணங்களிலிருந்து Logic ஐ எடுத்து நம்மை தர்க்கிக்க வைப்பது.

கிருஷ்ணா கிருஷ்ணா is that kind of one.

பதிவுலகிற்கு ஒரு நற்செய்தி! வாங்க அரசியல் பண்ணலாம்...



யாரு இவனுக....


இவந்தாங்க இந்த மூனு பேர்ல முக்கியமான ஆளு..பேரு பட்டாபட்டி..பேருதான் பட்டாபட்டி..செய்யறதெல்லாம் முறுக்கு விக்கற பட்டாபி மதிரி இருக்கும்...ரொம்ப சொல்ல முடியாது..ஆனா கொஞ்சம் காமெடி பீசு...ப.மு.கனு ஒரு கட்சியோட மாநில தலைவர்,தேசிய தலைவரும் இவந்தான்..எது தொண்டர்களா...சரியான காமெடி சார் நீங்க..ஆனா ஒன்னு....இவன் கட்சியோட மிகப் பெரிய சக்தி இவனோட மகளிர் அணி..தி மு க வே இவன்கிட்ட இருக்கற மகளிர் அணி கூட்டத்தப் பார்த்துட்டு இவனோட கூட்டணி வச்சிறலாமானு யோசிச்சிட்டிருக்குன்ன பார்த்துக்கோங்க..ஒபாமாலருந்து பக்கத்து வீட்டு மாமா வரைக்கும் இவன் வாய்ல விழாதவங்களே கெடயாதுங்க.எதாச்சும் லொடலொடன்னு பேசிக்கிட்டே இருப்பான்..ப்லாக்ல கலர் கலரா எழுதிக்குவான்....இவனோட மைனஸ் பாயின்ட் மூனு ரூவாவும் ஒரு மசாலா பாலும் வாங்கி குடுத்தா..ப மு க வை உங்களோடதுன்னு பொதுக்குழுவ கூட்டி அறிவிச்சிடுவான்..ஆனா மகளிர் அணில இருக்கற ஒரு பொன்னோட மயிர் போனாலும் இவனுக்கு உயிர் போயிரும்..துடிச்சு போயிருவான்..ஒபாமாவே வந்தாலும் தன்னோட மகளிர் அணிக்காக எதிர்த்துப் பொராடுவான் இந்த பட்டபட்டி.. சுருக்கமா சொன்னா..இவன் பக்கா அரசியல்வாதி சார்...

இவன் வெளியூர்காரன்..டிகிரில அரியர் வெச்சுட்டு எத்திராஜ் காலேஜ் வாசல்ல நின்னு ஃபிகர் தும்மிக்கிட்டு இருக்கிற அழகை பார்த்து ஜொள்ளு விட்டு கவிதை எழுதிட்டிருந்தவனை கூட பழகின பாவத்துக்கு பால்கோவா வாங்கித் தர்றேன்னுக் கூட்டிட்டு வந்து தளபதி ஆக்கி வெச்சுருக்கான் இந்த ரெட்டைவால்ஸ்...இப்போதைய ரெட்டைவால்ஸோட ஆட்சில ரெட்டைக்கு எல்லாமே இந்த வெளியூர்கார பயதான்..சுருக்கமா சொன்னா எடுப்பு..இல்ல அல்லக்கை..இவனும் லேசுப்பட்டவன் இல்லைங்க...முழு Knot Taker. புரியல..முடிச்சவிக்கி.தனக்கு பதவி கெடைக்கும்னு தெரிஞ்சா உங்கள புடிச்சு என்கிட்ட வித்துட்டு பட்டாபட்டிகிட்ட காசு வங்கிட்டு போய்ருவான்...இவன கரெக்டா யூஸ் பண்ணா இன்னும் ரெண்டு வருஷத்துல பாகிஸ்தான புடிச்சு பர்மாகிட்ட விக்கிற அளவுக்கு ஃப்ராடு.....ஆன என்ன ரெட்டைகிட்டையும் பட்டாபட்டிகிட்டையும் எதிரா அரசியல் பண்ணத்தெரியாம பண்ணி அடிக்கடி மாட்டிக்குவான்...இன்னொரு முக்கியமான விஷயம் இவன் விஜயோட தீவிர ரசிகன்...சுறாவுக்கு ரெண்டு டிக்கெட் வாங்கி தர்றேனு யாராச்சும் சொன்னா தளபதி பதவிய அவங்களுக்கு எழுதி குடுத்துட்டு இவன் படத்துக்கு போய்டுவான்.நெறைய சினிமா பைத்தியம்...இவனோட ரொம்ப முக்கியமான வீக் பாயின்ட்..பொன்னுங்ககிட்ட அசிங்கப்பட்டு பல்பு வாங்கறது....பக்கத்து தெருவுல ஒரு பொன்னு என்னா அழகா கொட்டாவி விட்டுட்டுருக்குடானு யாராச்சும் சொன்னா போர்ல இருந்தாலும் துப்பாக்கிய தூக்கி போட்டுட்டு ஓடிப் போய் பராக்கு பார்த்துட்டு நிப்பான் இந்த பன்னாடை..மொத்தத்துல இவனும் அரசியல்வாதி..ஆன தனியா நின்னு அரசியல் பண்ணத் தெரியாத அரசியல்வாதி..இவன் ஒன்னு பட்டாபட்டியோட இருப்பான்..இல்ல ரெட்டைவால்ஸோட இருப்பான்...

இவன் ரெட்டைவால்ஸ்ங்க..அவனுக ரெண்டு பேர்கிட்டயும் இல்லாத ஒரு விஷயம்...இவன்ட்ட இருக்குன்னா அது மூளை...இந்த பய கொஞ்சம் புத்திசாலி..அரசியல்வாதிலயே கொஞ்சம் ஹை கிளாஸ் அரசியல்வாதி.இவனுக்கு ரோடு போடறதுல காசு அடிக்கற டீல் எல்லாம் புடிக்காது...ஒயின் சாப்பிட்டுக்கிட்டே ஏ.சி ரூம்ல வெள்ளைக்கரனோட கையெழுத்துப் போட்டு Cல காசு அடிக்கனும்னு யோசிக்கற கிரிமினல் ..ஆனா இவன்ட்டயும் ஒரு வீக் பாயின்ட் இருக்குங்க..இவன் தூங்கிட்டுருக்கும்போது யாராச்சும் வந்து எழுப்பி என்கூட வா லெமன் ஜூஸ் வாங்கித் தர்றேனு சொன்னா போதும்....எச்ச பக்கி சட்டை கூட போடாம கூடவே போயிரும்..ஆனா அரசியல்ல சூரப்புலி...அதனாலதான் இப்போ இவன் ஆட்சில இருக்கான்..

இவன் வெளியூர்காரன் பட்டபட்டி இவனுக மூனு பேரும் பண்ணப்போற அரசியல் கூத்தைத்தான் இனி ப்லாக் உலகம் பார்க்கப் போவுது...இவனுக மூனு பேர்கிட்டயும் உள்ள ஒத்துமை..மூனு பேருமே மொள்ளமாரிங்க..ஃபர்ஸ்ட் கிளாஸ் முடிச்சவிக்கிங்க...மாறி மாறி கூட்டு சேர்ந்துக்குவானுங்க...திடீர்னு ஒரு டீக்காக எச்ச மாதிரி அடிச்சிக்குவானுங்க....

தெலுங்கானா பிரச்சினைல ஆரம்பிச்சு அஃபிரிடி பந்தை சாப்பிட்டதில இருந்து ராகுல் காந்தி பார்லிமெண்ட்ல உளறிகொட்டறது வரைக்கும் எல்லாமே இவனுகளுக்கு ஜாலிதான். இங்க நடக்கப் போற WWFல இப்போதைக்கு மன்னர் ரெட்டைவால்ஸ். கொஞ்ச நாளைக்கு முன்னால பட்டாபட்டியை சதி பண்ணி மகளிர் அணிக்கு மட்டும் தலைவராக்கிட்டு ப.மு.க வை எழுதி வாங்கிட்டானுங்க வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்.மன்னர் ரெட்டைவால்ஸோட ராணுவ தளபதியா இருக்கான் வெளியூர்காரன்.( இளைய தளபதி மாதிரி இருக்குன்னு அவனே கேட்டு வாங்கிக்கிட்ட போஸ்டிங் இந்த ராணுவ தளபதி). இந்த மூனு அயோக்கியப் பயலுவ பண்ற அரசியல் கூத்தைத்தான் இனிமே பார்க்க போறீங்க.

அப்புறம்...ஃபாண்டசி காமெடி பிடிக்காதவங்க இந்த இடத்தை ஃபிரீயா விடுங்க...வேற எங்கயாவது போய்ட்டு உங்க பேரப் புள்ளைங்களை இங்க அனுப்பி விட்ருங்க.

பின்னூட்டம்ங்கற பேர்ல நீங்க என்ன வேணுமனாலும் எழுதலாம் (இவனுங்களே பதிவை விட பின்னூட்டம் தான் அதிகமா எழுதுவானுங்க ) நீங்களும் அரசியல் பண்ணலாம்.

இனி புது கூட்டணிகள் உருவாகலாம் புது கட்சிகள் உருவாகலாம் ... ஏன் இந்த மூனு பேருமே இல்லாம போகலாம் ...ஆனா இந்த அரசியல் தீ அணையாது!

இப்படிக்கு

கொளுத்திப் போட்ட நிம்மதியுடன்

இந்திய தேசத்தின் நிரந்தர மன்னர்

சர். டாக்டர்.ரெட்டைவால்ஸ்

(சர் மற்றும் டாக்டர் பட்டங்கள் சென்னை பல்கலைக் கழகங்களில் சகாய விலையில் கிடைக்கின்றன... தள்ளுபடி ஸ்டாக் உள்ளவரை மட்டுமே)

ஜக்குபாய் - ஒரு கண்ணீர் காவியம்



சரத்குமாரை நினைச்சா கண்ணீர் தாரை தாரையா ஊத்துது...பின்னே என்னங்க..இந்தப் படத்தையாடா நெட்ல ரிலீஸ் பண்ணீங்க? புதை குழிக்குள்ள விழறதுக்கு அப்படி என்ன அவசரம்?

சரி போகட்டும் விடு..நம்ம கதைக்கு வருவோம். படம் முடிஞ்ச உடனே விவாதக்குழுன்னு ஒரு நாலு பேரோட பேர் போட்டானுக... விவாதம் பண்ணானுகளா இல்லை ப்ரொட்யுசர் காசுல உக்காந்து எகத்தாளம் பண்ணானுகளான்னு தெரியலை.

ஹீரோ ஹீரோவோட பொண்டாட்டி, கவுண்டமணி இன்ட்ரொடக்ஷன் எல்லாம் முடியறதுக்குள்ளேயே நமக்குக் கண்ணெல்லாம் இருட்டிக்கிட்டு வருது...அப்புறமா இந்த ஷ்ரியா.. தமிழ் சினிமால வர்ற அக்மார்க லூஸூ..அம்மாவோட பொணத்தை வீட்ல போட்டு பப் ல வந்து போதையைப் போட்டு ஆடுது..அடடா..என்ன மேதைங்கடா நீங்க.அப்புறமா கொஞ்சம் சண்டை கொஞ்சம் சென்டிமெண்ட் ஒரு பாட்டு அப்புறமா திரும்ப ஒரு சண்டைனு இந்த நூற்றாண்டிலேயே ரொம்ப வித்தியாசமான படம் இது தான்.

வில்லன் காமெடி பெருங்காமெடி. கடத்தல் கார வில்லன் எப்படியிருப்பான்னு எம்.ஜி.ஆர் படம் போட்டுப் பாத்திருப்பாய்ங்க போல..சை! உங்களையெல்லாம் ஏண்டா சுனாமி தூக்கலை! எடிட்டிங் பண்ணவருக்கு டைரக்டர் மேல என்ன கோவம்னு தெரியலை, சும்மா தமாஷ் பண்ணிருக்கார்.

மியூசிக் எல்லாம் ரொம்ப கஷ்டம் பாஸ்! செகண்ட் ஹாஃப்ல ரொம்ப போர் அடிச்சதுனால தலைகளை எண்ணிக்கிட்டு இருந்தேன். மொத்தமா தியேட்டர் ல 36 பேர் இருந்தோம். நடுவுல எந்திரிச்சுப் போனவங்களையும் சேத்து தான் 36 பேரு. கே.எஸ்.ரவிகுமார் கமல் படங்கள்ல வேலை பார்த்துட்டு இயக்கம்னு பேரை மட்டும் போட்டுக்கலாம். கஷ்டபட்டு டைரக்ஷன்லாம் செஞ்சு நம்மளையும் சோதனை பண்ணி....

சரத்குமார் தான் ரொம்ப பாவம்..கட்சி போணியாகாம நடிக்க வந்தா சனீஸ்வர பகவான் கே.எஸ்.ஆர் ரூபத்துல சீட் பெல்ட் போட்டு பக்கத்தில் உக்காந்துருக்கார் போல.. கவுண்டமணி ரொம்பக் கஷ்டப்பட்டு அப்பப்போ சிரிக்க வைக்கிறார். ஆனா சரத்தோட மாமனார் சாகும்போதும் அவர் வொய்ஃபா வர்றவங்களும் 'நடிக்கும்போது' நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்

நாங்கதான் நீங்க மரத்தடில உக்காந்து தீர்ப்பு சொல்றா மாதிரி படம் எடுத்தா நூறு நாள் ஓட்டுறோம்ல..அப்புறம் ஏன்யா ஏன்?

ரெட்டைவால்ஸின் பிரஸ் மீட்.


சலாமியா தேச மன்னருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்ட கையோடு ரெட்டை வால்ஸ் அளித்த பிரஸ் மீட்டின் சிறப்புப் பகுதிகள்..இதோ...

தினக் குசும்பு நிருபர் : நீங்க எப்போ மன்னரானீர்கள்?

ரெட்டைவால்ஸ் : பட்டாபட்டியை கைது செய்வதுடன் என் பணி நின்றுவிடவில்லை. மக்களைக் காப்பாற்ற மீண்டும் எமெர்ஜென்ஸி கொண்டு வரலாம் என நினைத்தேன். அதை விட மன்னராட்சியே பெட்டர் என்று வெளியூர்காரன் சொன்னதால் நானே மன்னராகி விடுவது என்று முடிவு செய்து விட்டேன்.

தி.கு நிருபர் : பட்டாபட்டியின் கதி என்ன?

ரெ.வா : பட்டாபட்டிக்கு லிம்ஃபோசாடயரியகோமா வந்துவிட்டதால் அவரை மெண்டல் ஹாஸ்பிட்டல் அனுப்பிவிட்டோம். கிளின்டன் மோனிகாவெல்லாம் அவருடன் பேசுவதாக நினைத்துக் கொண்டுள்ளார். விட்டா என்.டி.திவாரிக்கு சரக்கு சப்ளை பண்ணேன்னு கூட சொல்வார். பட்டாபட்டி மெண்டலானது காலத்தின் கட்டாயம்...

தி.கு.நிருபர் : வெளியூர்காரனை என்ன செய்தீர்கள்?

ரெ.வா : அவன் தானங்க இப்போ ராணுவ தளபதி( சே! அவனையும் சீக்கிரம் போட்டு தள்ளணும்..இல்லாட்டி என்னிக்காவது பொது வேட்பாளரா நின்னு உயிரை வாங்குவான்)

தி.கு. நிருபர் : மக்களுக்கு என்ன சொல்ல வற்ரீங்க?

ரெ.வா : போய் புள்ளகுட்டியை படிக்க வைங்க என்பது பழைய டயலாக்காக உள்ளதால் ...போய் சரக்கைப் போட்டு சாய்ஞ்சிடுங்க..

தி.கு நிருபர் : பட்டபட்டி அணிந்திருந்த பட்டாபட்டியை என்ன செய்தீர்கள்?

ரெ.வா :அதை ஆராய்ச்சி செய்த நம் விஞ்ஞானிகள் அது அணுக்கழிவுக்கு ஒப்பானது என்று தெரிவித்துள்ளனர். அதனால் அதை ராணுவதளபதி ஆஃப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்வது என்று முடிவு செய்துள்ளார்.

இதனிடையில் ஹாஸ்பிட்டலில் நர்ஸுகளீடம் பட்டாபட்டி அவர்கள் நிறைய சில்மிஷம் செய்து வருவதாக செய்தி வந்துள்ளது . இந்த ராஜ துரோகக் குற்றத்துக்கு துபாய் பாணி தண்டனை வழங்கப் போவதாக ரெட்டைவால்ஸ் அறிவித்தார். அதுவும் வெளியூர்காரனைக் கொண்டே "அதை" வெட்டப் போவதாக அறிவித்துள்ளார்.

ப.மு.க தலைவர் பட்டாபட்டி கைது.


தினக்குசும்பு பத்திரிக்கையின் தலைப்புச் செய்திகள்.


(அள்ளித்தந்த வானம் விவேக் ஸ்டைலில் படிக்கவும்...)

ப.மு.க ரெண்டாக உடையுமா...தமிழக மக்கள் துக்க்க்க்க்கம்...!

பட்டாபட்டி நாடாவை கழட்டுனது நாங்கதானுங்கோஓஓஒ...மார் தட்டுகிறார்கள் வெளியூர்காரனும் ரெட்டைவால்ஸும்...

ப.மு.க, தேர்தலுக்கு வாக்காளர்களுக்குக் கொடுத்த நிதியில் கள்ளநோட்டைக் கலந்து விட்டது யார்? கட்சித் தொண்டர்கள் தலைவரிடம் வீராவேசம்.

மகளிர் அணித் தலைவிக்காக சண்டை போட்ட ப.மு.க தலைவர்கள். பட்டாபட்டி உள்ளே நுழைந்ததால் அடிதடி. இரு தலைவர்கள் உயிர் ஊஊஊஊஊசல்....!

ப.மு.க வின் சின்னம் பட்டாபட்டி யாருக்குக் கிடைக்கும்... சோழி உருட்டி தேர்தல் ஆணையம் தேர்வு.

கடைசியாக வந்த தகவலின் படி ரெட்டைவால்ஸின் பிரதமர் பதவிக்கு ஆபத்து இருப்பதால் ப.மு.க நிறுவனரும் தலைவருமான பட்டாபட்டி அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.வராமல் அடம்பிடித்த பட்டாபட்டியை போலிஸார் அடித்து துவைத்துத் தொங்கப் போட்டனர்.இதனால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர்
 
இந்தக் கைது சம்பவத்தை முன்னின்று நடத்திய டி.ஜி.பி.க்கு தங்கப் பதக்கம் வழங்குவதாக பிரதமர் ரெட்டைவால்ஸ் அறிவிப்பு. இந்தக் கைது சம்பவத்தைப் பற்றிப் பொது மக்கள் என்ன நினைக்கிறார்கள்.


அயனாவரம் அம்புஜம்: பட்டாபட்டிய தூக்கி ஜெயில்ல மட்டும் போடாதீங்கோ..அப்டியே என்ணைக் கொப்பரைல வறுத்து ..அன்னியன் படத்துல காட்டுவாளே அந்த மாதிரியெல்லாம் செய்துடுங்கோ..கடன்காரன்! தேர்தலப்போ அவன் சின்னத்தை வரைஞ்சு வீட்டு காம்பவுண்ட் சுவரையே நாறடிச்சுட்டான்.



கூடுவாஞ்சேரி கோயிந்த சாமி : நாட்டுல ஜனநாயகம் செத்துப் போச்சு...ராணுவ ஆட்சி வரணும்.

மாம்பலம் மன்னாரு : அய்யோ ராசா போய்ட்டியே...(மேற்கொண்டு அந்த ஒப்பாரியைக் காதுகளால் கேட்க முடியவில்லை)

சாந்தோம் சின்னசாமி : குவார்ட்டர் குடு சொல்றேன்!

கல்பாக்கம் கல்பனா: யாரது பட்டாபட்டி? ஆதித்யா டி.வி.காம்பியரா?

நுங்கம்பாக்கத்தில் ஒரு கல்லூரி மாணவி : Actually..This is a great tragedy you know...and...I luvvvv shah rukh.... when is his new release........?

.
.
.
முக்கியச் செய்தி : நாடா இல்லாத பட்டாபட்டியை இன்றிரவு 8.30 செய்திகளில் காணத்தவறாதீர்கள்

மிலிட்டரி ஹோட்டலில் வெட்டு வெட்டென்று வெட்டிக் கொண்டிருந்த வெளியூர்காரன் ராணுவ தளபதியாகவும் செயல் படுவார் என்று நம்பத் தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவனுகளெல்லாம் யாருன்னு தெரியனுமா..அப்போ முதலில் நீங்க இதைப் படிச்சிருக்கணும்.

வெளியூர்காரனும் வெத்து ஃபிகருங்களும்



வெளியூர்காரனுக்கு ரெண்டு விஷயம் ரொம்ப பிடிக்கும். ஒன்னு பால்கோவா , இன்னொன்னு பால்கோவா மாதிரியான ஃபிகர். ஆனா பாருங்க இவனுக்கு ஃபிகருங்களை எவ்வளோ பிடிக்குமோ அதுல அஞ்சு பர்சன்ட் கூட ஃபிகருங்களுக்கு இவனை பிடிக்கிறதில்லை.ஏன்னு காரணம் கேட்டா என்னத்தை சொல்றது? மாப்ள ராசி அப்படி! வடிவுக்கரசி மாதிரி இருக்கற ஃபிகருங்க கூட இவனை மதிக்கிறதில்லைன்னா மனுஷனுக்கு எப்படி இருக்கும்?


ஃபிகர் உஷார் பண்றது ஒரு கலை.அதுவும் ஆய கலைகளில் ஃபர்ஸ்ட்.அதுக்குன்னு வாழ்க்கைல நிறைய இழக்க வேன்டி வரும்.காலைல நேரமே எழுந்து குளிக்கனும்,குறிப்பா பல் தேய்க்கணும்.இதுலயெல்லாம் நம்ம ஆளு செம கில்லாடி. ஃபிகர் வர்றதுக்கு முன்னாடி மேக்கப் எல்லாம் போட்டுக்கிட்டு பஸ் ஸ்டாப்ல போய் நிப்பான்,ஆனா அவ இவனைப் பார்த்து கேவலமா ஒரு லுக் விடும் பாரு...நீயா இருந்தா தொங்கிடுவ...பட் மாப்ள கவலைப்பட மாட்டான்.எனக்கு தெரிஞ்சு டெடிகெஷன்னா அது வெளியூர்காரன் தான்.

இப்படிதான் ஒரு நாள் கீழ்பாக் கார்டன் ஸ்டாப்ல நின்னுக்கிட்டு இருந்தோம்.நல்லா பேசிட்டு இருந்தவன் திடீர்னு ஜே.டி சாலிங்கர் , ஓ.ஹென்றின்னு என்னென்னவோ பெனாத்துனான்,சைட்ல பாத்தா ஒரு சக்கை ஃபிகர்.சரி அடிச்சு விடுறான்னு நானும் விட்டுட்டேன்.

அப்படியே கொஞ்சம் கொஞ்சமா கொஞ்ச நேரத்துல கரெக்ட் ஆயிடுச்சி... இவன் ஜாதகத்துல இப்படி நடக்க வாய்ப்பே இல்லையேன்னு யோசிச்சா இந்த பக்கமா ஒருத்தன் வந்து ரேட் பேசிட்டு இருக்கான். சே...ஐட்டம் உஷார் பண்ண ஓ.ஹென்றி பத்தி பேசுன ஒரே ஆளு நம்மாளுதான்யா!

சரி அதாவது போகட்டும்...ஒரு நாள் ரங்கநாதன் தெருவுல சுத்திட்டு இருந்தோம்.தீபாவளி கூட்டம் வேற. ஃபிகருங்க கூட்டம் கூட்டமா சுத்திட்டு இருக்காங்க.மாப்ளைக்கு எதை எடுப்பது எதை விடுப்பதுன்னே தெரியலை.ஒரு வழியா கூட்டத்துக்கு வெளியில வந்து வாங்கினதெல்லாம் பைக்குள்ளதான் இருக்கான்னு பாத்துட்டு இருக்கேன். போலீஸ்காரர் ஒருத்தர் எல்லாரையும் வெரட்டிக்கிட்டு இருந்தார். சரி வாடா போகலாம்னு திரும்பறதுக்குள்ள சார் ஏதோ பொண்ணைப் பார்த்து வழிஞ்சிட்டு இருக்கார்.டென்ஷன்ல போலீஸுக்கும் கூட்டத்துக்கும் தகராறு நடக்க , அந்த தள்ளுமுள்ளுல " இந்த போலீஸ்கார ....... மவனுங்களே இப்படிதான்டா"ன்னு கத்திக்கிட்டே ஒரு ஆட்டோக்குள்ள போய் விழுந்தான்.ஆட்டோ ல ஒருத்தர் முடியைப் பிடிச்சி மேல தூக்கினார்.பார்த்தா அவரும் போலீஸ். ஷ்ஷ்...யப்பா அவனால நானும் தீபாவளியை வேடிக்கை தான் பாக்க முடிஞ்சது.கொண்டாட முடியலை.அப்பப்போ காதுல ஜெட் ஏர்வேஸ் போகும் ரெண்டு பேருக்குமே.

இவ்வளவு ஏங்க ! கிரடிட் கார்ட் வேணுமான்னு கேட்ட பொண்ணுக்கிட்டு நம்பர் கேட்டு உஷார் பண்றேன்னு அவளை நேர்ல பாக்கப் போய் பேஸ்த் அடிச்சமாதிரி வந்தான். ஃபிகர் எப்படி இருந்துச்சுன்னு கேட்டா ஒன்னுமே சொல்லலை. ஒரே புலம்பல். கூட போனவன் கிட்ட எப்டிடா இருந்தா ஃபிகர்னு கேட்டோம். மேடம் கருணாஸ்க்கு லேடி கெட்டப் போட்டமாதிரி இருந்திருக்காங்க. சரி இன்னிக்கு குவார்ட்டருக்கு மேட்டர் கிடைச்சிடுச்சினு சந்தோஷமா இருந்தா மேட்டர் அது இல்லையாம். இவன் ஃபோன்ல பம்பாய் அரவிந்த்சாமி மாதிரி இருப்பேன்னு புருடா விட்டிருக்கான்..கடைசில அது கோவிச்சுட்டு போயிடுச்சாம்..

இப்போ பிளாகுல வந்து என்னை சைனா ஃபிகர் டேட்டிங் கூப்பிடுது ஆஸ்திரேலியா ஃபிகர் பார்ட்டிக்குக் கூப்பிடுதுன்னு கலர் கலரா ரீல் விட்டுட்டு அலையுது. அட! சேட்டுக் கட்டை வேணாம்..ஒரு நாட்டுக்கட்டை...ம்ஹூம்...

இவனைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கு. அது இன்னொரு எபிசோட்ல.