RSS

ஒரு குட்டிப் புதிர்!


ஒருத்தனுக்கு 1990 ல் 15 வயசாகுது. அதே பையனுக்கு 1995 ல் 10 வயசு. எப்படி?


இந்த மாதிரி சட்டி கேள்விக்கே மண்டைய உடைச்சுக்கிறீங்களா? அப்போ அவசியம் இலவசக் கொத்தனார் பக்கத்துக்குப் போங்க....தலை கலைஞர் மாதிரி ஆயிடும்...

வாவ்! ஏ.ஆர்.ரஹ்மான் தோன்றும் வெள்ளைப் பூக்கள் பாடல்


ரஹ்மானின் வெள்ளைப் பூக்கள் பாடல் கன்னத்தில் முத்தமிட்டால் (2002) என்னும் மனிரத்னம் திரைப்படத்தில் இடம்பெற்றது.ரஹ்மானைப் பிடிக்காதவர்கள் கூட சிலாகித்த பாடல் இது. இந்தப் பாடலை ரஹ்மானே தோன்றிப் பாடினால் எவ்வளவு அழகாக இருக்கும்.இதோ... நீரைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் அழகான சிறுவர்களுடன் ரஹ்மான் தோன்றும் வீடியோDude...You are a Genius!

கொஞ்சம் ஹிஸ்டரி..கொஞ்சம் புவனேஸ்வரி!அதிகாலையில் காஃபியோட பேப்பர் படிக்கிற சுகம் சத்தியமா லாப்டாப் லயும் டெஸ்க்டாப் லயும் நியூஸ் வாசிக்கறப்போ கிடைக்காது. பேப்பரிலும் புதுசா ஒண்ணும் இருக்கப் போறதில்லை. அதே..."தீவிரவாதத்தை வேரறுப்போம் என பிரதமர் கூறினார்"," மைனாரிட்டி அரசு பதவி விலக வேண்டும் என ஜெயலலிதா கூறினார்".ங்கிற ஜல்லிகள்.அப்புறம் அரைப் பக்கத்துக்கு சரவணா ஸ்டோர் விளம்பரங்கள். சில சமயம் பேப்பரைப் பார்க்காமலேயே என்னென்ன நியூஸ்னு யூகிச்சுட்டுப் போயிடலாம்.எப்பவாவது பரபரப்பா நடந்தா அதுவும் அடுத்த நிமிடங்களிலேயே பிரேக்கிங் நியூஸாக டி.வி.யில் வந்துவிடுகிறது.அப்புறம் மறுநாள் பேப்பர்ல புதுசா என்ன போட்டிருக்கப் போறான்னு அலட்சியமா ஸ்போர்ட்ஸ் சினிமான்னு தாவிடுவோம்.

ஆனா சி.என்.என்கள், என்.டி.டி.விக்கள் இல்லாத காலத்தில் நியூஸ்பேப்பர் முதல் பக்கத்துக்கு எவ்வளோ மவுஸ் இருந்திருக்கும்.
அப்படி அந்த நியூஸ்பேப்பர்கள் இப்போ வாசிக்கக் கிடைச்சா எப்படி இருக்கும்.?சரி..இந்தியாவுல வந்த முக்கியமான பேப்பர்கள் கூகிள் பண்ணிப் பார்த்தா..ம்ஹும்.. சரித்திரத்தை பத்திரப் படுத்த நம்மாளுங்களுக்கு இன்னும் சில நூற்றாண்டுகள் தேவைப்படும்.கிடைச்ச மட்டில சிலதை நம்மளாவது இப்போவே பதிவு பண்ணிடுவோம்.

 
    டைட்டானிக் மூழ்கியபோது....
 
ஹிட்லர் இறந்த மறுநாள்...
ஆர்ம்"ஸ்ட்ராங்"காக நிலாவில் இறங்கிய பொழுது

இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில்...
அறுபத்திரண்டு வருஷங்கள் முன்பு... இந்தியாவில்

படு பாதாளத்தில் வால் ஸ்ட்ரீட்...

உலகத்தின் மோசமான ஒரு நாள்...

இவிங்க எப்பவுமே கொஞ்சம் ஓவர் தான்...
சுனாமி..!(நாம போகிற போக்கைப் பாத்தா இன்னொரு காட்டு காட்டும் போலிருக்கே)


 கடைசியா... யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.
தமிழன் வாழ்க்கையையே மாற்றி அமைத்த வரலாற்று சம்பவம் இல்லையா இது...!
பின்குறிப்பு : 

உலகத்தையே புரட்டிப் போட்ட சம்பவங்கள் நம்ம வாழ்நாளில் ஒண்ணோ ரெண்டோ நடந்திருக்கலாம்.அதனால சில தாத்தாக்கள் இதைப் படித்திருக்கிறீர்கள் (அ) பார்த்திருக்கிறீர்கள் என்றால் உங்கள் அனுபவங்களை பின்னூட்டமிடவும்.

கொஞ்சம் சில்லறை கிடைக்குமா?திடீர்னு நண்பன் ஒருத்தன் தீபாவளி கிஃப்டா இதைத் தூக்கிக் குடுத்துட்டுப்போய்ட்டான். இந்த நோட்டை வச்சிக்கிட்டு கொஞ்சம் சில்லறை குடுக்க முடியுமா...? தீபாவளி செலவுக்கு ஆகும்.(மன்மோகன் சிங் கிட்ட போட்டுக்குடுத்துடாதீங்க).

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பர்களே..!


ஆம்லெட் போடுவது எப்படி?


உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது ஆம்லெட் போட்டிருக்கீங்களா ? மண்டையை ஆட்டுவதிலிருந்தே உங்கள் நிலைமை புரிகிறது. சரி கவலையை விடுங்கள். இந்த செய் முறையை நன்கு ஊன்றிப் படித்து முயற்சி செய்து பார்க்கவும். பிறகு பாருங்கள் ! நீங்கள் தான் உங்கள் ஏரியாவில் ஆம்லெட் எக்ஸ்பர்ட்.

முக்கிய குறிப்பு: ஆம்லெட் வட்ட வடிவில் தான் இருக்க வேண்டும்  என்று காலம் காலமாக இருந்து வரும் சம்பிரதாயத்தை உடைக்கும் மன நிலை ரொம்பவும் அவசியம்.

தேவையான பொருட்கள்: ஒரு பிளாஸ்டிக் கிளாஸ்,  வாட்டர் பாக்கெட் 2, ஊறுகாய் பாக்கெட் 1 மிதமாக கெட்டுப் போன சுண்டல் பாக்கெட் 1, கடைசியாக நீங்கள் மிகவும் விரும்பும் ஓல்ட் மாங்க் அல்லது வி.எஸ்.ஒ.பி அல்லது எம்.சி ஒரு குவார்ட்டர்


செயல் முறை : தனியாக நின்று போராடுவதை விட யாரையாவது கூட வைத்துக் கொள்வது உத்தமம்.

முதலில் பாட்டிலை கீழே ரெண்டு தட்டு தட்டி மூடியை லாகவமாக திறக்கவும். பின்பு சரக்கை கிளாஸில் ஊற்றவும்.

பின்பு வாட்டர் பாக்கெட்டின் ஓரமாகக் கடித்து கிளாஸில் சர்ர்ர்ரென்று தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கவும்.

நுரை வடியும் வரை காத்திருக்காமல் " மகிழ்ச்சி"..(  அட !சியர்ஸ் தாங்க தமிழ் ல மகிழ்ச்சி) என்று கூட இருப்பவரின் கிளாஸில் அடித்து அவர் சரக்கைக் கொஞ்சம் கீழே சிந்த விட்டு மடக் மடக்கென்று முடித்து விடவும். சிறிது நேரம் கழித்து ஊறுகாய் ஒன்றை எடுத்து நக்கிக் கொள்ளவும். நக்கியவுடன் ஸ்...ஆஆஆ என்ற சத்தம் மிகவும் அவசியம்.
கையில் இருக்கும் சுண்டலைப் பிரித்து ஒவ்வொன்றாக வாயில் போடவும். இப்படியாக ஒரு குவார்ட்டரை முடித்தவுடன் அடுத்த குவார்ட்டருக்குக் காசு இருக்கா என்று பர்ஸில் தேடவும். காசு இருக்காது. நண்பரைக் கேட்கவும். அவரும் இல்லை என்பார்.

பிறகு நம்  மொக்கையை ஆரம்பிக்க இதுவே சரியான சமயம்.

நீங்கள் : மச்சி..உனக்கு சர்ரியலிசம்னா என்னன்னு தெரியுமா?

நண்பர்   : என்னது ஷகீலாவா?

நீங்கள் : இல்லைடா ... சர்ரியலிசம். இது ஒரு வகையான கலை உத்தி.நவீன இலக்கியத்தில

நண்பர்   : உங்க ஆயா..இன்னொரு குவார்ட்டர் வாங்க காசு வச்சிருக்கியா

நீங்கள் : இல்லை... முந்தா நேத்து NO MANS LAND னு   ஒரு படம் பார்த்தேன்டா..டைரக்டர் என்னமா...

நண்பர்   : கந்தசாமி பாத்தியா...என்னா கருத்து மச்சி...படம் பம்பர் ஹிட்.

( நீங்கள் சினிமா பற்றி பேச வேண்டாம் என முடிவு செய்து விடுவீர்கள் ).

நீங்கள் : சரி அப்போ பார்ப்போம் மச்சி...! அடுத்த சனிக்கிழமை மீட் பண்ணுவோம்.

நண்பர்: அடுத்த சனிக்கிழமை தீபாவளி டா. வேட்டைக்காரன் டிக்கெட் புக் பண்ணிடறேன்.

வேட்டைக்காரன் என்ற பெயரைக் கேட்டதும் உங்களுக்கு தலையெல்லாம் கிர்ர்ர்ரென்று சுத்தி உவ்வ்வ்வ்வே...என்று ஒன்று போடுவீர்கள் இல்லையா..அது தான் ஆம்லெட்

எல்லாம் ஒரு விளம்பரம் தான்...உலகில் முதன் முதலில் விளம்பரங்கள் செய்ய பாப்பிரஸ் என்ற தாவரத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள்.பண்டைய ரோமனிய கிரேக்கர் காலத்திலேயே போஸ்டர் எல்லாம் ஒட்டி ஓட்டுக் கேட்டு அதகளப் படுத்தியிருக்கிறார்கள். அப்புறமா மெல்ல சிந்து வழியா இந்தியா வந்து தமிழ்நாட்டுக்குள்ள எட்டிப் பார்த்த விளம்பரங்களை, அதுக்குன்னு ஒரு கலாச்சாரத்தை உருவாக்கி எங்கேயோ கொண்டு போய்ட்டாங்க நம்ம மக்கள்.

ஆனா முக்கியமான இடங்கள்ல இப்போ போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னு கார்ப்பரேஷன் தன் சொந்த(?) செலவில ஓவியங்களை வரைஞ்சு தமிழ்நாட்டு லியானார்டோ டாவின்சிக்களையும் பிக்காஸோக்களையும் பதற வச்சிக்கிட்டுருக்கு. மெட்ராஸ்ல ஹோர்டிங்குகளை எடுத்தாலும் எடுத்தானுங்க..என்டெர்டெய்ன்மெண்டே போச்சு பாஸ். முன்னெல்லாம் வண்டி ஒட்டும் போது வேடிக்கை பாத்தாலே ஒரு பக்கம் நயன் தாரா இடுப்பைக் காட்டும்..இன்னொரு பக்கம்  த்ரிஷா பல்லைக் காட்டும்..ஷ்ரியா எதை எதையோ காட்டும்.மெட்ராஸ் காரனுங்களுக்கு அந்த குடுப்பினை எல்லாம் இல்லங்க. சரி! சொந்த சோகம் உங்களுக்கு எதுக்கு?

ஆனா போஸ்டரை பார்த்து உச் கொட்டலைன்னா நம்ம கண்ணு கெட்டுப் போய்டும் இல்லையா...அதனால சில ஹோர்டிங்குகள் நெட்ல இருந்து சுட்டது ..உங்களுக்காகமில்லியன் டாலர் கேள்வியும்...சில குட்டிக் கேள்விகளும்..!சில கேள்விகள் உலகத்தையே மாத்திடும்! ஆப்பிள் ஏன் கீழே விழுகிறது? என்ற ஒரு கேள்வி விஞ்ஞானத்தின் திசையையே திருப்பியது.அது போல சில கேள்விகளுக்கு பதிலே கிடையாது.நான் யார்? பிரபஞ்சத்தின் எல்லை எது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் கடவுள் தான் வந்து பதில் சொல்லனும். மிகப்பெரிய ஆன்மீகவாதிகளும், அறிவு ஜீவிகளூம்,நாத்திகர்களும் அதைப் பற்றிக் கவலைப் பட்டுக்கட்டும்.

நம்மோட கேள்விகள் அதுவல்ல.தினசரி அலுவல்களில் நாம் கண்டும் காணாமல் கடந்து செல்வது இவைகள்.பதில் தெரிஞ்சா ஹெல்ப் பண்ணுங்க.இல்லாட்டி உங்க ஃப்ரண்ட்ஸ்களை இம்சை பண்ணுங்க.

கேள்விகள் இது தான்...!

1. ஒரு காய்ன்ல ஹெட்ஸ்(Heads) தலைன்னா டெய்ல்(Tails) "வால்"னு தானே சொல்லனும்.ஏன் "பூ"ன்னு சொல்றாங்க?


2. எப்போதும் கையில் ஏன் பச்சை மட்டும் குத்திக்கிறாங்க? ப்ளூ, ஆரஞ்சு, வயலெட்னு ஏன் குத்திக்கிறதில்லை?


3. (-) * (-)= + கரெக்ட்தான்.ஆனா ஏன்?


4. நாலு பேருக்கு நல்லது செஞ்சா தப்பில்லைன்றாங்களே...யார் அந்த நாலு பேர்?


5.இருக்கிறதா நெனைச்சிக்கிட்டு சாமி கும்பிடறதுக்கு எல்லாரும் கோவிலுக்குப் போறாங்க."நான் சாமியைப் பார்த்தேன்"னு ஒருத்தர் சொன்னா சட்டுனு யாரும் நம்ப மாட்றாங்களே ஏன்?


6."Never Say Never Again" - பிரபலமான ஜேம்ஸ்பான்ட் படம் இது. டைட்டிலை கொஞ்சம் தமிழ்ப்படுத்துங்களேன்.


7. பரீட்சையில் ஃபெயில் ஆனா கோட் அடிச்சுட்டான்றாங்களே அந்த கோட் எங்கே,எந்தத் துணிக்கடையில கிடைக்கும்?


8. எல்லாருக்கும் புரிகிற மாதிரி ஒரு தடவையாவது கமல் பேட்டி குடுப்பாரா மாட்டாரா?


9.சில பேர் பேட்டி குடுக்கும் போது " நான் ஒரு வீட்டுப் பறவை"ங்கறாங்களே.அவங்களுக்கு றெக்கை இருக்குமா?


10. கடைசியாக...இந்த மில்லியன் டாலர் கேள்வி,பில்லியன் டாலர் கேள்வினு ஒன்னு அடிக்கடி பத்திரிக்கைல வருதே..அந்த கேள்விக்குப் பதில் சொன்னா உண்மையிலேயே மில்லியன் டாலர் தருவாங்களா?

பதில் தெரிஞ்சா சொல்லுங்க இல்லைனா விட்டுடுங்க.வீட்டுக்கு ஆட்டோவெல்லாம் அனுப்பாதீங்க ப்ளீஸ்...!

முந்தைய பதிவின் முடிவு: ஜே.கே.ரித்தீஷ் விருது யாருக்கு?.நடிக்க வருதுன்னு நெனைச்சிக்கிட்டு இன்னும் நம்மளை கொன்னுக்கிட்டிருக்கிற அண்ணன் சேரன் தான்